Friday, January 14, 2011

வீட்டு மூலிகைத் தோட்டம்



வீட்டு மூலிகைத் தோட்டம் மற்றும் இயற்கை வைத்தியம் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். இந்நாளில் மக்களிடையே ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நாம் ஆரோக்கியமாகவும் எந்த நோயும் நம் உடலை தாக்கா வண்ணமும் இருக்கவும் மக்கள் அதற்கரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை படிப்பதன் மூலம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும் மூலிகை மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் மூலம் நோயற்ற வாழ்விற்கு மூலிகைகள் எப்படி பயன்படுகிறது என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



1. கீரைகள் 9. செம்பருத்தி 16. ஆடுதோடா இலை, மரம்
2. துளசி 10. முருங்கை கீரை 17. வேப்பிலை மரம்
3. தூதுவளை 11. பப்பாளி மரம் 18. புங்கை மரம்
4. புதினா 12. வெங்காயம் 19. மா மரம்
5. கொத்தமல்லி 13. நொச்சித் தலை 20. வாழை மரம்
6. வல்லாரை 14. இஞ்சி
7. கற்பூரவல்லி 15. பூண்டு
8. கருவேப்பிலை.


பலவகையான வைட்டமின் தரும் கீரைகள்

  1. வாய்ப்புண் : மணத்தக்காளி கீரையைப் பருப்புடன் சமைத்து பகல் உணவுடன் சாப்பிடவும். அரை டம்ளர் பால் பருகவும்.
  2. நாக்கில் இரணம் : கடுக்காய் தோலை சிறிது வாயில் அடக்கி வைத்துக் கொண்டால் இரணம் ஆறி விடும்.
  3. வாய் நாற்றம் : புதினாத் துவையல் உண்டால் நீங்கும். வெந்நீரில் சிறிது எலுமிச்சை ரசத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.
  4. தொண்டைப் புண், தொண்டை வலி : ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்ச பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மூன்று நாட்கள் பருகவும். இதை தொடர்ந்து 40நாட்கள் பருகினால் டான்சில்ஸ் குணமாகும்.
  5. தொண்டைக் கட்டு : சீரக கஷாயத்தில் தேன் விட்டுக் குடிக்கவும்.
  6. பல்லில் மஞ்சள் கறை : உமிக்கரியும், உப்பும் சேர்த்து பல் துலக்க வேண்டும். பல் வெண்மையாக மாறும். 
  7. பல் கூசுதல் : இஞ்சி கஷாயத்தில் தேன் விட்டுக் குடித்து வந்தால் பல் கூச்சம் மாறும்.
  8. பல்வலி : ஒரு டம்ளர் நீரில் மூன்று பூண்டுப் பற்களை பொடிசெய்து நீரில் இட்டு மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்

No comments:

Post a Comment