Friday, January 14, 2011

வீட்டு காய்கறி தோட்டம்

முதலில் கொஞ்சம் வெயில் அதிகம் படும் இடமாக தேர்வு செய்யுங்கள். எந்த வகை மண் நல்லது? களிமண் இல்லாத பட்சத்தில் ஓ.கே. மண் கட்டிகள் இல்லாமல் சமன் செய்து கொள்ளவும். சிறந்த வடிகால் வசதி தேவை.

உங்கள் தோட்டத்தை நீங்களே டிசைன் செய்யலாம். ஒரு சிறிய இடத்தில் ""நாற்றங்கால்'' என குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாற்றங்காலில்தான் வெண்டை, மிளகாய், கத்தரி, தக்காளி எல்லாம் தன் முதல் 15 நாட்களை கழிக்கப் போகின்றன. இதுதான் உங்கள் காய்கறி பயிரின் குழந்தை பருவம். நாற்றங்காலில் விதைகள் முளைத்து இலைகள் பரப்பி ஒரு 10 செ.மீ. வளர்ந்தபின் சிறிய இடைவெளி விட்டு பிடுங்கி நட்டுவிடலாம். ஒவ்வொரு காய்கறிக்கும் நடும் இடைவெளி வித்தியாசப்படும். வீட்டு தோட்டம் என்பதால் இடைவெளியை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக கீரை என்று எடுத்துக்கொள்வோம். நாற்றங்கால் பெரிதாக தேவையில்லை. 25 முதல் 30 நாளில் வீட்டு தோட்டத்தில் கீரை ரெடி. கீரை விதைகளை விதைக்கும்போது கவனம் தேவை. எறும்புகள் தொல்லை தரும். அடியுரமாக நன்கு மக்கிய கம்போஸ்ட் உரங்களை (இயற்கை உரம்) இடுங்கள். தேவைப்பட்டால் கடலை புண்ணாக்கு + வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம். உங்களுக்கு எந்த கீரை வகை பிடிக்கிறதோ அதை நீங்கள் வீட்டு தோட்டத்தில் நடலாம்.

வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி இவை பொதுவாக ஒரே வயதுடைய காய்கறி பயிர். இடைவெளி விட்டு நட்டு பயன்பெறலாம். இவைகள் 45 முதல் 120 நாள் வரை காய்கள் தரும். பூச்சி தொல்லை இருப்பின் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். ரசாயன உரங்களையும் பூச்சி மருந்துகளையும் தவிர்ப்பது நல்லது. காய்கறி விதைகளை கடைகளில் விசாரித்து வாங்குங்கள். காய்கறி செடிகளை வளர்ப்பதற்காக தற்போது கன்டெய்னர்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தலாம்.

புடலங்காய், பாகற்காய் இவையெல்லாம் படரும் தாவரம். எனவே படர்வதற்கு பந்தல் தேவை. கம்பு மற்றும் ஸ்டீல் கொண்டு நீங்கள் பந்தல் அமைக்கலாம். உங்கள் வீட்டின் வசதியை பொறுத்து படரும் தாவர காய்கறி வகைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். பழைய சாக்கு, உபயோகமற்ற டிரம் இவற்றில் மண் நிரப்பி நீங்கள் வாழை, பப்பாளி வளர்க்கலாம். ஏன் மாமரம், கொய்யா கூட வளர்க்கலாம்.

உங்கள் வீட்டு மண் பொலபொல தன்மைஉடையதா?, சேனைகிழங்கு வளர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான உரத்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம். எப்படி என கேட்கிறீர்களா? வீட்டின் பின்புறத்தில் ஒரு சிறிய குழி (30 செ.மீ. ஆழத்தில்) எடுத்து தினமும் வீட்டில் கிடைக்கும் குப்பைகளை அதில் கொட்டுங்கள். 90-120 நாளில் நன்கு மக்கிய இயற்கை உரம் தயார். உங்கள் வீட்டு தோட்டத்தில் வளரும் காய்கறிகள் இயற்கையானதும், விஷமற்றதும் என்பது மட்டுமல்லாமல் உங்கள் காய்கறி தோட்டம் உங்களுக்கு ஒரு உடற்பயிற்சிகூடம் என்பதையும் மனதில் 

No comments:

Post a Comment